வறுமையை மறைக்கும் சீனா – அமெரிக்கா பகிரங்கம்! !
உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை ஓய்வூதியமாகப் பெறும் ஒருவர் பொருட்கள் வாங்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் காணொளி சீன சமூக வலைதளங்களில் வைரலானதாகவும் அதனை சீன அரசு நீக்கியதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.
மேலும் சீனாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் அங்குள்ள மக்களை அதிருப்தியில் தள்ளி இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
சீனாவை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “என் முகத்தை தினமும் நீரால் சுத்தம் செய்கிறேன். ஆனால் என் முகத்தைவிட என் பணப்பை சுத்தமாக இருக்கிறது” என்ற பாடலை பாடி பதிவேற்றியுள்ளார்.
இந்த நபரின் பக்கத்தையும் சீன அரசு தடை செய்துள்ளதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.