தொடர்மழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!!
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. தற்போது பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 117.30 அடியாக உள்ளது.
அணைக்கு 204 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.46 அடியாக உள்ளது. 113 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக அணையில் இருந்து 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 30 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.74 அடியாக உள்ளது. 10 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2, தேக்கடி 0.4, போடி 0.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.