முருகனுடன் மூவர் கைது!!
தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான முருகன் சிலை ஒன்றை தம் உடமையில் வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் அந்த மூவரும் ஒப்படைத்துள்ளனர்.