திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிக்கு நேர்ந்த பரிதாப நிலை!!
அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களை தேடி வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.