உக்ரைனின் எதிர் தாக்குதல் – ரஷ்யாவிற்கு தடையாகும் வரலாற்று நிகழ்வு..!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைன் பாரிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இப்போரில் இரு தரப்பினருக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பாக்முட் எல்லையில் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர் தாக்குதல் நடத்தும் வகையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையிலுள்ள கருங்கடலில், உக்ரைனின் 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப் போரில், ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு இடையே நடைபெற்ற பெரும் போரில் ரஷ்யா வெற்றி பெற்றது.
ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யா இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டதில், 27 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது.
உலக வரலாற்றில் போரில் அதிக மக்களை இழந்தது ரஷ்யா தான்.
எனவே இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில், ரஷ்யா ஆண்டுக்கு ஒருமுறை இராணுவ அணிவகுப்பு நடத்தி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும்.
இந்நிலையில் புடினை கொல்ல, ரஷ்யாவின் அதிபர் மாளிகை மீது, உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு காரணமாக இந்த விழா கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.