மண்டைதீவில் 85 கிலோ கஞ்சா மீட்பு!!
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.