இரு சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்!!
வெள்ளவத்தை கடற்பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை (மே 06) மீட்டுள்ளனர்.
வெள்ளவத்தை கடற்கரையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இலங்கை பொலிஸின் உயர்காப்பு பிரிவு அதிகாரிகளினால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், களுபோவில, கொழும்பு தெற்கு போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்னர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் 17 மற்றும் 15 வயதுடைய மாளிகாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
பிள்ளைகளை கடலில் அல்லது நீர்பரப்புகளில் நீராடுவதற்கு அனுமதிக்கும் போது பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.