வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் – ஜானக்க வக்கும்புர!!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று(08) வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாம் தேர்தலில் போட்டியிடும் எல்லைக்கு வெளியே பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு, இதற்கு முன்னரே பணிக்கு சமூகமளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிடும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் அரச ஊழியர்கள், சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், நிறுவனத் தலைவரின் அறிவுரையின் பேரில் அருகிலுள்ள தேர்தல் எல்லைப் பகுதியில் பணி புரிவதற்கான வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.