வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 10ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். புயலானது 11ம் தேதி காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி நோக்கி நகர்ந்து, வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நெருங்கும். புயல் உருவானால் மோக்கா என பெயரிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.