அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர் -வாழ்த்து தெரிவிக்கும் ட்ரம்ப் !!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விவேக் ராமசாமியை பாராட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். இந்த வேட்பாளர் தேர்தலுக்கு அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
மற்றொரு இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலேயும் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விவேக் ராமசாமியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
“விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றி கூறுவதற்கு நல்ல விடயங்களே உள்ளன. அண்மைய அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார்.
‘அதிபர் ட்ரம்ப்’ குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விடயங்களை மட்டும் கூறக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்” என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.