அய்யய்யோ ச்சீ! என்னங்க இது! விந்துவால் தயாரிக்கப்படும் புதிய டிஷ்! உலகின் சிறந்த செஃப் தயாரிப்பு!
ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள்.
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது… என்ற பாடல் வரிகளுக்கேற்ப எந்தெந்த ஊரில் எந்த உணவு பிரபலமோ அதை சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கும். சாப்பிடுவதற்காகவே பல ஊர்களுக்கு செல்வோரும் இருக்கிறார்கள்.
அது போல் உணவு குறித்து ஒருவர் கூறுவதை பார்த்தாலே மற்றவர்களுக்கு எச்சில் ஊறும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்று பிரபல உணவாக இருக்கும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பிதான்.. சென்னை ஈசிஆரில் வருகிறது மிதக்கும் உணவகம்..அப்படி என்ன ஸ்பெஷல்? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பிதான்.. சென்னை ஈசிஆரில் வருகிறது மிதக்கும் உணவகம்..அப்படி என்ன ஸ்பெஷல்?
அது போல் தென்னிந்திய சமையல், வடஇந்திய சமையல் என்றும் இருக்கிறது. பசி ருசி அறியாது என்றாலும் ருசி என்பது மாறுபடும். வீட்டிலேயே புதிய புதிய உணவு வகைகளை செய்தால் செய்த மாத்திரத்தில் காலியாகிவிடும். அது நன்றாக இருக்கிறதோ இல்லையோ , பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. அதனால் அந்த உணவை நம் வீட்டில் விட்டு வைக்க மாட்டார்கள்.
அது போல் வித்தியாசமான பொருட்களை வைத்து கூட உணவுகளை செய்வார்கள். பலர் கடலில் கிடைக்கும் பாம்பு மீனை சமைக்கிறார்கள், அது போல் முயல், ஆமை உள்ளிட்டவைகளையும் சமைத்து உண்கிறார்கள். கடலில் கிடைக்கும் சிப்பியை கூட விட்டு வைப்பதில்லை. அது போல் கடல் பாசி போட்டும் புதிய உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.
கிராமப்புறங்களில் நத்தை, கடல் சங்கு உள்ளிட்டவைகளையும் வேக வைத்து ஓடு தனியாக கறி தனியாக பிரித்து உண்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் கேட்கவே தேவையில்லை. ஜப்பான், சீனாவில் எல்லாம் வெட்டுக்கிளி, எலி, கரப்பான்பூச்சி, வண்டுகள், பாம்பு உள்ளிட்டவற்றை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
தற்போது ஸ்பெயினில் இவற்றை எல்லாம் விஞ்சும் அளவுக்கு மீனின் விந்துவிலிருந்து ஒரு உணவுவகையை தயாரிக்கிறார்களாம். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டை சேர்ந்தவர் டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞர்தான் இந்த புதிய விதமான டிஷ்ஷை செய்துள்ளார். இவர் டைவர் எக்ஸ் ஓ எனும் உணவகத்தின் உரிமையாளர் ஆவார்.
மீனிலிருந்து சிறு பைகளில் விந்து எடுக்கப்படுகிறது. அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கப்படும். இந்த விந்துகள் பஃபர் பிஷ், மாங்க் பிஷ், காட் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்படுகிறது.
டேவிட் முனோஸ் அண்மையில் ஜப்பான் சென்றிருந்தார். அங்கு சமையல் கலைஞரான ஹிரோசாடோவுடன் மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பிறகு இந்த யோசனை வந்துள்ளது. இதை சமைத்து மக்களுக்கு அவர் தருவதில்லையாம். யாராவது மெனுவை பார்த்து கேட்டால் தருகிறாராம். மீன் விந்துவில் சமைத்த உணவு என்றால் மக்கள் குமட்டுகிறார்கள்.
அந்த உணவு வித்தியாசமாகவும் சாப்ட்டாகவும் கிரீமியாகவும் இருக்கிறது என்கிறார். டேஸ்டும் கடல் உணவு சாப்பிடுவதை போல்தான் இருக்கிறது என்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விந்து உணவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கொடுத்துள்ளார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்ரிட்டில் நடந்த விழாவில் உலகிலேயே சிறந்த சமையல் கலைஞர் என்பதற்கான விருதை பெற்றார் முனோஸ்.