புதிய புயல் உருவாகின்றது!!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல நிலை இன்று பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும்.
விசேடமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.