;
Athirady Tamil News

பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை!!

0

பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் கட்டட பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த காதல் மனைவி எனக் குறிப்பிடப்படும் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேக நபர், குறித்த கட்டட பணியாளரின் முன்னாள் மனைவி என்றும் மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் சந்தேகநபர் கட்டட பணியாளரை விவாகரத்து செய்து சுமார் மூன்று வருடங்கள் ஆவதாகவும், அதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகவும் கட்டிட பணியாளர் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (09) காலை குறித்த கட்டட பணியாளர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சந்தேக நபர்களான முன்னாள் மனைவியும் அவரது தம்பியும், வீட்டிற்கு சென்று கொலையுண்ட பெண்ணிடம் பேசி, வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து கூரான கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வலஸ்முல்ல, கட்டுவன, அலுபொத்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த விவாகரத்துப் பெற்ற 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.