100 வீடுகள் எரிக்கபட்டிருக்கும்;விஜயதாஸ !!
கடந்த வருடம் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்குத் தீ வைக்கத் திட்டமிடப்பட்டதாக நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
எரிப்பதற்காக 100 வீடுகள் பட்டியலிடப்பட்டிருந்ததாகவும் அந்தப் பட்டியலில் சில ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் பெயர்கள் முதலிடத்தில் இருந்ததாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு செயலாளரிடம், ஆயுதப்படைகளிடம் சுடும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அறிவித்தோம். அவர்கள் அவ்வாறாக ரத்கம, அங்கொட மற்றும் புறக்கோட்டையில் என மூன்று துப்பாக்கிப் பிரயோகங்களை செய்தனர். அப்படி சுடவில்லையென்றால் குறைந்தது 100 வீடுகளாவது எரிந்திருக்கும்.
தயார்ப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலின் படி மே 9 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலரின் வீடுகளும் அலுவலகங்களும் அழிக்கப்பட்டன என அமைச்சர் மேலும் தெரவித்தார்.