சீனி விலை உயர்வு பற்றிய அறிக்கை வேண்டும் !!
சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் இவ்வேளையில் சீனியின் விலையை அதிகரிக்க வேண்டிய காரணம் இல்லையென அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“கோதுமை மாவின் மீது புதிய சுங்கத் தீர்வை விதிக்கப்பட்டதற்காக கோதுமை மா விலையும் அதிகரிக்கக் கூடாது. இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 13% ஆல் குறைந்துள்ளது. உலக சந்தையிலும் கோதுமை மாவின் விலை 15% குறைந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
அத்துடன் முட்டை இறக்குமதி பற்றிப் பேசிய போது , 2023 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 4.5 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.