ஜோர்டானில் புதுமையான வடிவங்களில் நகை தயாரிக்கும் வியாபாரி: உலகளவில் நரி வடிவில் காதணி விற்பனை செய்யும் ஒரே நபர்!!
ஜோர்டானில் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் புதுமையான வடிவங்களில் அணிகலன்களை உருவாக்கி உலகரங்கில் அங்கீகாரம் பெற்று வருகிறார். ஜோர்டானில் 4 தலைமுறைகளாக நகை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர் அப்துல்லா. பாரம்பரிய வடிவங்களில் மக்களை கவரும் வகையில் அணிகலன்களை செய்து வந்த அவர் உலகளவில் தனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் தற்போது புதிய வடிவங்களில் அணிகலன்களை உருவாக்கி வருகிறார்.
புதிய முயற்சியாக சிங்கம், புலி, முதலை, பாம்பு, டிராகன் போன்றவற்றின் உருவங்களில் அவர் நகைகளை வடிவமைத்து வருகிறார். அரபு நாடுகளிலேயே தனித்த அடையாளத்துடன் நகைகளை உருவாக்கும் அப்துல்லா தனது நகை வடிவங்களுக்கு அமெரிக்காவில் காப்பு உரிமைகளை பெற்று வருகிறார். உலகளவில் வேறு எங்கும் காணப்படாத வகையில் நரியின் உருவத்தில் அவர் வடிவமைத்துள்ள காதணி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.