மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும்: அமெரிக்க – பிரேசிலிய ஆராய்ச்சியாளர் தகவல்!!
வரும் காலங்களில் மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என அமெரிக்க – பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் செவிலியர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு உலகளவில் போதுமான நபர்கள் இல்லாத சூழலில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோக்கள் அந்த இடங்களுக்கு மாற்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.