பிணைக் கைதியாக மாறிய உக்ரைன் !!
மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறயுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற வருடாந்த வெற்றி விழாவில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது,
“தற்போது நடக்கும் போர் திணிக்கப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் மோதலைத் தூண்டி விடுகின்றன.
அதனை நாங்கள் உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறோம். எமது தாய் மண்ணையும், டான்பாஸ் மக்களையும் பாதுகாத்து வருகிறோம்.
அந்த நாடுகள், எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டிவிடுகின்றன.
‛ரஷ்யாபோபியா’வால் அவை பாதிக்கப்பட்டு உள்ளன.
அமைதியான எதிர்காலத்தையே ரஷ்யா விரும்புகிறது. ஆனால், எம்மை அழிப்பதே, எமது எதிரிகளின் நோக்கமாக உள்ளது” – என்றார்.