உண்மையான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது – ரஷ்யா எச்சரிக்கை..!
மொஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டங்களுக்கு புடின் தலைமை தாங்கினார்.
குறித்த நிகழ்வில் ரஷ்யாவின் வரலாறு ஒரு “தீர்க்கமான திருப்புமுனையில்” இருப்பதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக “உண்மையான போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனின் நாசிப்படை தோற்றது போல், ரஷ்யா உக்ரைனிடம் தோற்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக போரில் ரஷ்யா ஜெர்மனியிடம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், இராணுவ அணிவகுப்பு மற்றும் இறந்த இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்படும்.
இந்த ஆண்டு அதிபர் மாளிகை தாக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணமாக இந்த விழா கொண்டாட்டத்தை ரஷ்ய அரசு இரத்து செய்திருந்தது.
உலக போர் வரலாற்றில் ஒரு போரில் ஒரு நாட்டின் மக்கள் அதிகம் உயிரிழந்ததென்றால், அது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெர்மனி ரஷ்யாவிடம் சரணடைந்த நாளின் விழாவில், பேசிய உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி
‘இதே நாளில் ஜெர்மனின் நாசிப்படையை ரஷ்யா வீழ்த்தியது, ஆனால் அதே போல் உக்ரைன் ரஷ்யாவை வீழ்த்தும்’ என கூறியுள்ளார்.
ரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது அதிகபடியான டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.
’ரஷ்ய நாசிப்படையை வீழ்த்தும் போது இருந்த அதே மிருகத்தனத்தோடு தான் தற்போதும் உள்ளது” என உக்ரைன் உலக போரில் நினைவு நாளில் கூறியுள்ளார்.
எனினும் புடினின் உரையானது உக்ரைனை எச்சரிப்பதாகவும், உக்கிரமான தாக்குதலுக்கான ஆரம்ப கருத்தாகவும் பார்க்கப்படுகிறது.
சோவித் ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்ட ரஷ்யா, தற்போது அதனுடன் இருந்து பிரிந்த நிலையில், 1945ஆம் ஆண்டில் ஜெர்மனின் நாசிப்படை சரணடைந்த நாளை ஐரோப்பிய நாள் என கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.