திண்டுக்கல் வடமலையான் ஆஸ்பத்திரியில் வருமான வரி சோதனை!!
திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் வரிஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சோதனை மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரி அலுவலகத்தில் உள்ள கணினி, மருந்தகம், டாக்டரின் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.