;
Athirady Tamil News

வியாபார நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் BB அணியினர்!! (PHOTOS)

0

யாழ் மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை தற்போது Bussiness Board ஆரம்பித்துள்ளது.

வடமாகாணத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் இதுவரையில், கூகிள் வழிகாட்டியில் பதியப்படாதிருப்பின் அவர்களது வியார நிலையத்தினை கூகிள் வழிகாட்டியில் பதிவுசெய்வதோடு BB தமது இணயத்தளத்திலும் பதிவு செய்யும் நடவடிக்கையை கடந்த 2022 டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் சிறுதொழில் முயற்சியாளர்களை சந்தித்து அவர்களது வியாபாரங்களை BB யினர் பதிவுசெய்ததோடு முல்லைதீவு மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களையும் BB அணியினர் பதிவு செய்தனர்.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் வவுனியா மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களை பதிவு செய்தனர்.

அவற்றை தொடர்ந்து தற்போது யாழ். மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Bussiness Board என்பது ஒரு வியாபார வலைத்தளம் . இதன் மூலம் தங்களது வியாபார நிறுவனத்திற்கு இதுவரை சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம், ருவிற்றர் மற்றும் வலைத்தளம் இல்லாதவர்களுக்கு அவற்றை தயாரித்து வழங்கவும் முன் வந்துள்ளது.

மேலும், சிறுகைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளப்படுத்தி, அவர்களுக்கு கரம் கொடுத்து அவர்களை வெளியுலகத்தோடு இணைக்கும் ஓர் பாலமாக இந்த BB தனது சேவையை இலவசமாக மேற்கொண்டுவருகின்றது.

BB யுடன் இணைப்பதன் மூலம் வடக்கின் வியாபாரங்களை விரிவுபடுத்த உதவுவதோடு அவர்களுக்கான சந்தைப்படுத்தல் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றது .

அதுமட்டுமன்றி , BB ஆனது தனது சேவையினை எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களை நோக்கி நகர்வதற்கு திட்டமிட்டுள்ளதுடன் வியாபாரத்தில் வெளி உலகில் பிரகாசிக்க முடியாதவர்களுடன் BB கைகோர்க்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.