கோதுமை மாவுக்கு 5 சதமும் கூடவில்லை !!
லங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் 5 சதம்கூட அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் கோதுமை மா உற்பத்தியாளர்களிடம் மாவின் விலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான மா கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், மாவின் விலை அதிகரிப்பட வில்லை என்பதை அறிவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.