;
Athirady Tamil News

92,435 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் !!

0

தமிழ்நாட்டின் அகதி முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தமாக 92,435 பேர் வசிக்கின்றனர் என்றும் அவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு தாம் திரும்புவதற்கு விரும்பினால் அவர்கள் அந்த முகாம் பொறுப்பாளரிடம் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இவ்வாறாயினும் நாடு திரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அவர்களுக்கு எத்தகைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமோ அதனை அரசாங்க மேற்கொள்ளும் என்றும் எமது உதவி உயர் ஸ்தானிகர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) வாய்மூல விடை க்கான வினா நேரத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சி னைகளை வடக்கு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின் போது விரிவாக கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) வாய்மூல விடை க்கான வினா நேரத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறுகையில்,

தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் 106 அகதி முகாம்களில் 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக படகுகள் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் 2012 ஏப்ரல் வரை விமானம் மூலம் சென்றவர்கள்அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் அங்கு சென்றவர்கள் அகதி முகாம்களில் பதிவு செய்யப்படவில்லை.

அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 34 ஆயிரம் பேர் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.

படகுகள் மற்றும் விமானங்கள் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றார்கள் ” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.