கர்நாடகத்தில் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்: கடந்த சட்டசபை தேர்தலை விட 4½ மடங்கு அதிகம்!!
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் சட்டவிரோதமாக பணம் எடுத்து செல்வது, நகைகள், போதைப்பொருள், மதுபானம் கொண்டு செல்வதை கண்காணிக்க சோதனை சாவடிகள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. கர்நாடகத்தில் இதுவரை விதிகளை மீறியதாக ரூ.379 கோடி மதிப்பீட்டிலான ரொக்கம், தங்க நகைகள், மதுபானம், பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது சிக்கிய பொருட்களை விட 4½ மடங்கு அதிகம். தீவிரமான கண்காணிப்பு, சோதனைகள், அண்டை மாநிலங்களுடன் ஒருங்கைிணைந்து செயல்பட்டது, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் இந்த முறை பணம், பொருட்கள் வினியோகத்தை தடுத்துள்ளோம். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.