சூடான் பலி எண்ணிக்கை 604ஆக உயர்வு!!
சூடானில் உள்நாட்டு மோதலில் பலி எண்ணிக்கை 604ஆக உயர்ந்து விட்டது. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் மோதல் நீடித்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 604ஆக அதிகரித்து விட்டது. இதை ஐநா சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. தற்போது சவுதியில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உள்நாட்டு போரால் சுமார் 7 லட்சம் மக்கள் நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளதும் தெரியவந்துள்ளது. பதற்றத்தை தணிக்க ஐநா நடவடிக்கை எடுத்து வருகிறது.