சர்வதேச செவிலியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த 2 பேர் போட்டி!!
ஒவ்வொரு ஆண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் உலகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச செவிலியர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கான போட்டியின் இறுதி பட்டியலில் உலக அளவில் 10 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் இந்தியாவை சேர்ந்த 2 செவிலியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் பழங்குடியினருக்காக பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த சாந்தி தெரசா லாக்ரா, மற்றும் கேரளாவில் பிறந்த ஜின்சி ஜெர்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச செவிலியர் தினத்தன்று விருது பெறும் செவிலியர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.