பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் !!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
நேற்று (09) பிற்பகல் அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடியதுடன் புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
07 புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதியின் சிபாரிசுக்காக அந்த பெயர்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.