கனடாவில் ஆளும் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு..!
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது கட்சியின் President என்னும் பதவியாகும்.
இந்த President என்னும் கட்சித் தலைவருடைய பணி, கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நிதி திரட்டுதல் மற்றும் நாட்டில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துதல் முதலானவையாகும்.
லிபரல் கட்சியின் President என்னும் தலைமைப் பொறுப்பிற்கு, இந்திய வம்சாவளியினரான Sachit Mehra என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Sachit Mehraவின் பெற்றோர் Kamal மற்றும் Sudha Mehra என்பவர்கள். Kamal Mehra 1960களில் இந்திய தலைநகர் புதுடில்லியிலிருந்து கல்வி கற்பதற்காக கனடாவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.