அணுசக்தியின் எதிர்காலத் திட்டம் – பில் கேட்ஸ் தெரிவித்த விடயம்!
அமெரிக்காவில் அணுசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அணுமின் நிலையமானது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால் வயோமிங்கில் உள்ள கெம்மரரில் திறக்கப்படவுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அமெரிக்க எரிசக்தி சுதந்திரத்தை ஆதரிப்பதற்கும், இந்த திட்டம் உதவும் எனக் கூறப்படுகின்றது.
அணுசக்தி திட்டங்களை சரியாகச் செய்தால் நமது காலநிலை இலக்குகளைத் தீர்க்க உதவும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது, மின்சார அமைப்பை மிகவும் விலையுயர்ந்த அல்லது குறைந்த நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றாமல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை அகற்ற வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.