கனடா சிறையிலிருந்து ஆபத்தான கைதிகள் தப்பியோட்டம் !!
கனடாவில் சிறைச்சாலையொன்றிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாகவும் அதில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கைதிகள் தப்பிச் சென்றதை அடுத்து பாஸ் மற்றும் ப்ளோன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
ஏதேனும் சந்கேதத்திற்கு இடமான விடயத்தை அவதானித்தால் அதனை உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 204-627-6200 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.