தொழிலாளியின் பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்- கால்சட்டை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ் ரகுமான் (வயது 23). ரெயில்வே துறையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனது செல்போனை கால்சட்டை பையில் வைத்திருந்தார். அப்போது திடீரென அந்த செல்போன் வெடித்தது. அதோடு கால்சட்டையும் தீப்பிடித்து எரிந்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு அலறினார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கேரளாவில் கடந்த மாதம் 24-ந்தேதி திருச்சூரில் செல்போனில் வீடியோ பார்த்த 8 வயது சிறுமி செல்போன் வெடித்து இறந்தார். இந்த சம்பவம் நடந்த 2 வாரத்தில் மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.