;
Athirady Tamil News

கர்நாடகா தேர்தலில் பரபரப்பு- வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக கிராம மக்கள் ரகளை !!

0

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தன.

வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.