காத்தான்குடியில் 3 பேர் கைது !!
காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை இன்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இன்று பகல் காத்தான்குடி பர்ஸான் வீதியில் வைத்து 25 மற்றும் 28 வயதுடைய இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 50, மற்றும் 60 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை டெலிகோம் வீதியில் வைத்து 190 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளுடன் 33 வயதுடைய ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு இரு வேவ்வேறு சம்பவங்களில் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 பேரை கைது செய்ததுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸதார் தெரிவித்தனர்.