டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஹிபோ நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 95 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகாக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின.
இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.