பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்!!
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
மேலும், அவரது இந்தப் பயணம் இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளைப் பாதுகாக்கும். பாதுகாப்புத்துறை, தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நமது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்படுத்தும் வகையிலான பகிரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றையும் பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.