குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்த வாலிபர்!!
குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது. சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கி, இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.