;
Athirady Tamil News

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை செருப்பால் அடித்த மாமனார்!!

0

சமூக வலைதளங்களில் திருமண வீடுகளில் நடைபெறும் தகராறுகள் அடிக்கடி பகிரப்படுவதுண்டு. ஆனால் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அதில் திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்புவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்கின்றனர். அப்போது மணமகன், தன்னுடன் மணமகளை அழைத்து செல்ல வேண்டுமானால் வரதட்சணையாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என அடம் பிடிக்கிறார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் அவர் மசியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண்ணின் தந்தை தனது செருப்பை கழற்றி மாப்பிள்ளையை சரமாரியாக அடிக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத மணமகன் தனது மாமனாரிடம் அடிப்பதை நிப்பாட்டுமாறு கெஞ்சுவது போன்று காட்சிகள் உள்ளது. டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், மாப்பிள்ளைக்கு பிடித்திருந்த வரதட்சணை என்னும் பேய் மாமனாரின் செருப்புஅடியால் விரட்டப்பட்டது என கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.