முகப்புத்தகத்தில் தகாத வேலை செய்தவர் கைது!!
முகப்புத்தகத்தில் போலியான கணக்கை உருவாக்கி பாலியல் ரீதியிலான அறிக்கைகளுடன் சிறுவர்களின் புகைப்படங்களை பகிர்ந்த 40 வயதான நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குறித்த சந்தேக நபர் வத்தேகம, யட்டவர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளின் புகைப்படத்தை தகாத வார்த்தைகளுடன் பதிவேற்றியதாக தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.