;
Athirady Tamil News

100 மீற்றர் சென்ற யுவதி் 5 நாட்களாக மாயம் !!

0

பணியாற்றும் நிலையத்துக்கு செல்வதற்காக வீட்டிருந்து புறப்பட்டு 100 மீற்றர் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்த யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை, இவர உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் கிராமத்தவர்கள், கம்பளை பொலிஸார் இணைந்து தேடிவருகின்றனர்.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவுவரமா என்ற ​யுவதியே காணாமல் போயுள்ளார்.

அந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என அந்த யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து பயணவைத்து நடந்துச் செல்லும் காட்சி, எல்பிட்டிய பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் இறுதியாக பதிவாகியுள்ளது. அவ்விடத்துக்கு அப்பால் இருக்கும் எந்தவொரு கமெராக்களிலும் அந்தக் காட்சி பதிவாகவில்லை. அவரை கண்டவர்கள் யாரும் இல்லையெனவும் சகோதரன் தெரிவித்துள்ளார்.

பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்றும், தன்னுடனும் வேறு எவருடனும் எவ்விதமான மனஸ்தாபங்களும் இல்லையென்றும் அந்த யுவதியின் தாய் சின்னி சாஹிரா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.