;
Athirady Tamil News

3000 பேரை இணைக்கவில்லை;பந்துல விளக்கம்!!

0

ரயில்வே திணைக்களத்துக்கு 3000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பல்வகை செயலணிக்கு அரசாங்கத்தினால் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த 3000 பேரே நிரந்தர நியமனத்திற்காக, ரயில்வே திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்க நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கிருந்து ஊழியர்கள் அகற்றப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று வியாழக்கிழமை சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் சுயாதீனமாக ஓய்வு பெற்றுச் செல்லும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க ரயில்வே திணைக்களத்திலும் சில ஊழியர்கள் சுயாதீனமாக ஓய்வு பெற்றுச் சென்றிருக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எந்த அழுத்தங்களும் இல்லாமல் சுயாதீனமாக ஓய்வு பெறுபவர்களுக்கு அத்தகைய தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமான 600 பேர் சுயாதீனமாக ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர். அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழேயே அந்த செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.