இத்தாலியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் திடீரென வெடித்தது- பல வாகனங்கள் தீக்கிரையாகின!!
இத்தாலியின் மிலன் நகரின் மத்திய பகுதியில் இன்று குண்டு வெடித்ததுபோன்ற பயங்கர சத்தம் கேட்டது. சாலையோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு வேன் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பிடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. வேன் பற்றி எரியும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.