சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.