பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்- 3 பேர் கைது!!
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையின் எதிர் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பஞ்சாபை சேர்ந்த மல்கித் சிங், தர்மேந்திர சிங் மற்றும் ஹர்பால் சிங் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. செல்போனை ஆய்வு செய்ததில், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து தொடர்புக் கொண்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போதைப் பொருளை கையாளுபவர்கள் இந்த எண்களை பயன்படுத்தி பாகிஸ்தானால் கடத்தப்பட்ட போதைப்பொருள் சரக்குகளை எங்கு சேகரிக்க வேண்டும் என்றும், அது பின்னர் பஞ்சாபில் உள்ள சப்ளை செய்வது தொடர்பாகவும் தகவல் பகிரப்பட்டு வந்துள்ளது. மேலும், பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.