உக்ரைனின் இரகசிய தாக்குதல் – அமெரிக்க வெளியிட்ட தகவல்!
உக்ரைனியப் படைகள் ரஷ்யப் படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்படாத எதிர்த் தாக்குதலுக்கான தயார் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று மூத்த அமெரிக்க மேற்கத்திய இராணுவ அதிகாரி ஒருவர் உலக செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருது தெரிவித்த அவர்,
”குறித்த தாக்குதல் என்பது ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் கவசம் பீரங்கி அமைப்புகள் போன்ற இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் படைகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.
இது பெரிய கூட்டு நடவடிக்கைகளுக்கு முன் செய்யப்பட்ட ஒரு நிலையான தந்திரம்.
உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடந்த கோடையின் பிற்பகுதியில் ரஷ்யா எதிர்த்தாக்குதலை நடத்தியபோது, போர்க்களத்தை மையமாக கொண்டு வான்வழித் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்பட்டது.” என தெரிவித்தார்.
மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியின் கூற்றுப்படி, திட்டமிடப்பட்ட உக்ரேனிய தாக்குதலின் இந்த தாக்குதல் நடவடிக்கைகள் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வாக்குறுதியளிக்கப்பட்ட மேற்கத்திய இராணுவ உதவிகளில் இன்னும் சிலவற்றை நாட்டிற்கு வர அனுமதிக்க, எதிர் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் தனது நாட்டிற்கு “இன்னும் சிறிது காலம் தேவை” என தெரிவித்துள்ளார்.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், “நம்மிடம் உள்ளதைக் கொண்டு நாம் முன்னோக்கிச் சென்று வெற்றிபெற முடியும்.
ஆனால் நாங்கள் நிறைய உயிர்களை இழப்போம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் நினைக்கிறேன்.”
எனவே நாம் காத்திருக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை,” என்றார்.
இதற்கமைய உக்ரைனினுடைய “ஷேப்பிங் ஆபரேஷன்” தாக்குதல் எதிரியைக் குழப்பும் வகையில் வடிவமைக்கப்படலாம் என அமெரிக்க அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.