;
Athirady Tamil News

“இன்சுலின் ஊசி..” இம்ரான் கானை ஜெயிலில் கொலை செய்ய சதி? சாப்பாட்டில் கலக்கப்பட்ட “மர்ம” பொருள்?!!

0

இம்ரான் கான் கைதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் டாப் கிரிக்கெட் வீரரில் இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான். இவர் கிரிக்கெட்டில் எந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்தாரோ.. அதே அளவுக்கு அரசியலிலும் வெற்றிகரமாக இருந்துள்ளார்.

அங்கே கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அங்கே அவருக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இம்ரான் கான்: இதையடுத்து அவர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தார். பாகிஸ்தானில் அரசுக்கு இணையாக ராணுவமும் வலிமையாக இருக்கும். அங்கே ராணுவத்தை எதிர்க்கும் நபரால் நீண்ட காலம் பிரதமராக இருக்க முடியாது.. இம்ரான் கான் பிரதமராக இருந்த போது தொடக்கத்தில் ராணுவத்துடன் இணக்கமாக இருந்தாலும் கூட பின்னர் மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே மின்னல் வேகத்தில் காட்சிகள் மாறின.

கூட்டணி கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்பப் பிரதமர் பதவியை இழந்தார்.. அதன் பிறகு அவர் மீது தொடர்ச்சியாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், அதில் அவர் கைதாவதைத் தவிர்த்தே வந்தார். இந்தச் சூழலில் தான் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் ஐகோர்ட் வந்திருந்தார். அப்போது காதர் அறக்கட்டளை தொடர்பான வழக்கில் துணை ராணுவ படையினர் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து கைது செய்தனர்.

நீதிமன்றம் உத்தரவு: 70 வயதான இம்ரான் கான் கைது தொடர்பான வீடியோ அங்கே வேகமாகப் பரவிய நிலையில், கைதை கண்டித்து பெருந்திரளான போராட்டங்களும் நடைபெற்றது. இந்தச் சூழலில் 48 மணி நேரத்தில் இம்ரான் கானை விடுவிக்க உத்தரவிட்டது. இதனிடையே இந்தச் சம்பவங்கள் குறித்து இம்ரான் கான் தரப்பு சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

ஊழல் வழக்கில் கைதான இம்ரான் கானை சிறையில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டு இருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கைதுக்குப் பின் இம்ரான் சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட வேண்டும் என இம்ரான் உணவில் இன்சுலின் கலந்ததாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கொலை செய்யச் சதி: மேலும், மாரடைப்பை ஏற்படுத்தும் வகையில் தனக்கு ஏதோ ஊசியைப் போட்டதாகவும் கழிவறையைக் கூட பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் இம்ரான் கான் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இம்ரான் கான் அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். அவர் National Accountability Bureau காவலில் இருந்த போதே இதெல்லாம் நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், “இது அவரை கொல்லும் முயற்சி. அவரை தூங்கக் கூட அனுமதிக்கவில்லை. பெட் தரவில்லை. அவ்வளவு ஏன் டாய்லெட்டை கூட பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முதல் சாப்பிடக் கூட எதுவும் தரவில்லை” என்றார். இது பாகிஸ்தான் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் தான் பாகிஸ்தான் அமைச்சர் ராணா சனாவுல்லா, ஒன்று இம்ரான் கான் கொல்லப்படுவார் இல்லையென்றால் நாங்கள் கொல்லப்படுவோம் எனக் கூறியிருந்தார். அவர் அப்படிச் சொல்லி அடுத்த மாதமே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.