ஜீப் வடிவில் டி.வி. ஸ்டாண்ட்- ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்!!
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீட்டில் மகிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவத்தில் டி.வி. ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டின் மீது எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான டிசைனை பார்த்து வியந்து பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, ‘நன்றி… நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நான் பார்த்ததில் மிகப்பெரிய டேஸ்போர்டு ஸ்கிரீன் இதுதான்’ என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் புகைப்படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.