;
Athirady Tamil News

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக பேசும் நித்யானந்தா பெண் சீடர்கள்!!

0

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேசம் போன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு ஆதரவாக பா.ஜனதா நிர்வாகிகள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் சிலரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பேசுவது போன்ற வீடியோ நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், இந்த படம் அப்பாவி இந்துப் பெண்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதை துணிச்சலாக விளக்கமாக காட்டுவதாக கூறி உள்ளனர்.

மேலும், இந்த பெண்கள் மதம் மாறிய பிறகு எப்படி சித்ரவதையை எதிர் கொண்டார்கள் என்ற நிஜ வாழ்க்கை கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது குறிப்பிட்ட எந்த மதத்தையும் குறி வைக்கவில்லை. ஆனால் புள்ளி விபரப்படி பேசினால், முஸ்லிம் மக்கள் தொகை 35 மில்லியனிலிருந்து 172 மில்லியனாகவும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 28 மில்லியனாகவும் வளர்ந்துள்ளது. ஆனால் இந்து மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதற்கான மூல காரணம் என்னவென்றால் பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து மதம் பற்றி தெரியாது. நீங்களும் உங்கள் அடுத்த தலைமுறையினரும் இந்து மதத்தைப் புரிந்து கொள்வது முக்கியம்.

சுவாமி, நித்யானந்தா பரமசிவம் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்காக பிரத்யேகமாக 21 நாட்களை வடிவமைத்துள்ளார். இந்து மதத்தின் சிறந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுங்கள். இந்து மதத்தின் மிகவும் உண்மையான மற்றும் அறிவியல் அனுபவம் கிடைக்க வருகிற 15-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் சேரவும் என பெண் சீடர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.