;
Athirady Tamil News

லண்டனில் பணி வெற்றிடம்! இலவச பயண அனுமதி – முழு விபரம் வெளியானது !!

0

லண்டனில் பேருந்து நிலையக்கட்டுப்பாட்டாளர் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையை லண்டன் பேருந்து சேவை முன்னெடுத்துள்ளது.

கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

லண்டன் பேருந்து சேவையானது தற்போது 102 பணியிடங்களை கொண்டுள்ளதுடன், பேருந்து நிலையக்கட்டுப்பாட்டாளர் பணி அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தச் சேவைக்கு 9 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

மேலும், பேருந்து நிலையக்கட்டுப்பாட்டாளர் பணியில் இருப்பவருக்கு இலவச பயண அனுமதி அளிக்கப்படுவதுடன், ஆரம்ப ஊதியமாக 37,222 பவுண்டுகள் எனவும், ஆறு மாதங்களுக்கு பின்னர் 38,789 பவுண்டுகள் என அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பணிக்கு தெரிவாகும் நபர் குரோய்டன் அல்லது ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் பணியாற்ற நேரிடலாம் எனவும், லண்டன் பேருந்து சேவையில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேருந்து சேவை மட்டுமின்றி லண்டன் சுரங்க ரயில் சேவையிலும் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விரிவான தகவல்கள், லண்டன் பேருந்து சேவை இணைய பக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பேருந்து சேவையில் தற்போது 26,500 பேர்கள் பணியாற்றி வருகின்றதுடன், சுமார் 1,500 ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏஜென்சி தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.