பால்மா வலை குறைப்பு தொடர்பான செய்தி பொய்யா?
பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமை (15) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.