ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் பிரசார நிகழ்ச்சி திடீர் ரத்து!!
சிட்னியில் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த காலிஸ்தான் பிரசார நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் நடத்தும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி வரும் 24ம் தேதி சிட்னிக்கு செல்கிறார். இந்நிலையில், சிட்னியின் பிளாக்டவுன் சிட்டி பகுதியில் அடுத்த மாதம் நடத்த இருந்த காலிஸ்தான் ஆதரவு நிகழ்ச்சிக்கான முன்பதிவு நகர சபை நிர்வாகம் ரத்து செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிகழ்ச்சி, கவுன்சிலின் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நகர சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதுதொடர்பாக நகரின் பல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டன.